கோலி குறித்து புகார் அளித்த இரு வீரர்கள் இவர்கள்தான்… ஆங்கில ஊடகம் வெளியிட்ட செய்தி!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (17:16 IST)
இந்திய அணியின் கேப்டன் கோலி குறித்து மூத்த வீரர்களான புஜாராவும் ரஹானேவும் புகார் அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

விரைவில் டி-20 உலகக் கோப்பை  தொடருக்குப் பின்னர் இந்திய அணியின் டி20 கேப்டன்சிப் பொறுப்பில் இருந்து விராட் கோலி  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. ஏனென்றால் அவர் தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக வெற்றிகளை குவித்து வந்தது.

இந்நிலையில் இப்போது கோலி பதவி விலகியதற்கு அஸ்வின்தான் காரணமாக இருக்கலாம் என செய்தி வெளியிட்டுள்ளது ஒரு இணையதளம். இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் ஒரு மூத்த வீரர் தான் அணியில் பாதுகாப்பற்ற உணர்வோடு இருப்பதாக புகார் அளித்ததாகவும் அந்த புகாரின் அடிப்படையில்தான் கோலியிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டு அவர் இந்த முடிவை எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்த மூத்த வீரர் அஸ்வின் தான் எனவும் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் மற்றொரு ஆங்கில ஊடகம் புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் தொலைபேசி வாயிலாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவிடம் கோலியின் கேப்டன்சி குறித்து புகார் அளித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. அவர்கள் இருவரும் கடந்த சில போட்டிகளாகவே பார்ம் அவுட் ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்