Worldcup 2023: ரெண்டே பேரு.. இங்கிலாந்தை வெச்சு செஞ்ச நியூஸிலாந்து! – ஆரம்பமே அதகளம்!

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2023 (20:49 IST)
ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டி இன்று தொடங்கிய நிலையில் நியூசிலாந்து அணி வெற்றியுடன் ஆட்டத்தை தொடங்கி உள்ளது.



ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டிகள் இன்று இந்தியாவில் தொடங்கி நடந்து வருகிறது. இதன் முதல் போட்டியில் இன்று இங்கிலாந்து அணியை நியூசிலாந்து அணி எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியை நியூசிலாந்து அணி சிறப்பாக எதிர்கொண்டது. இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் அதிகபட்சமாக 77 ரன்களை குவித்தார். ஜாஸ் பட்லர் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். மற்ற அனைவரும் குறைவான ரன் விகிதத்திலேயே விக்கெட்டை இழந்தனர். போட்டியின் முடிவில் 50 ஓவருக்கு ஒன்பது விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 282 ரன்களை பெற்றது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது வில் யங் முதல் பந்திலேயே அவுட் ஆகி இருந்தாலும் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆன டேவன் கான்வே மற்றும் அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா இணைந்து அருமையான பார்ட்னர்ஷிப் வழங்கினர். இருவரின் அபார ஆட்டத்தால் 36வது ஓவரிலேயே நியூசிலாந்து அணி 283 ரன்களை குவித்து வெற்றியை கைப்பற்றியது. டெவான் கான்வே அதிகபட்சமாக 152 ரன்களை குவித்தார் ரச்சின் ரவீந்திரா 123 ரன்களை குவித்துள்ளார்.

இருவருக்குமே இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் முதல் ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 2019 ஆம் ஆண்டில் உலகக்கோப்பை இறுதியில் இங்கிலாந்து நியூசிலாந்து இடையே ஏற்பட்ட கணக்கை இன்று நியூசிலாந்து நேர் செய்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்