ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு கழுத்தை பாதுகாக்கும் உபகரணம் கட்டாயம் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேமரூன் க்ரீன் பேட்டிங்கின்போது பந்து கழுத்தில் தாக்கியதால் காயமடைந்தார்.
இதனால் பேட்டிங்கின்போது காயம் ஏற்படாத வகையில் கழுத்தை பாதுகாக்கும் உபகரணத்தை அனைத்து வீரர், வீராங்கனைகளும் அணிய வேண்டும் என விதிமுறைகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கட்டாயமாக்கியுள்ளது.
பேட்டிங்கின்போது ஹெல்மெட் அணிவதும் விதிமுறைகளில் உள்ளது. சமீபத்தில் ஆசியக்கோப்பை போட்டியில் இந்திய அணி பந்து வீச்சில் பாகிஸ்தான் வீரர் ஹெல்மெட் அணியாமல் விளையாடியதால் காயம்பட்டது குறிப்பிடத்தக்கது.