மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் நடந்த அதிரடி மாற்றம்!

vinoth
திங்கள், 14 அக்டோபர் 2024 (08:35 IST)
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சொந்த அணி ரசிகர்களாலேயே கேலி செய்யப்பட்ட அணியாக மும்பை இந்தியன்ஸ் இருந்தது.  ஹர்திக் பாண்ட்யா, ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக மும்பை அணிக்குக் கேப்டனாக்கப் பட்டது சர்ச்சைகளை உருவாக்கியது. ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாக ரசிகர்கள் அவரையும் அணி நிர்வாகத்தையும் கடுமையாக கேலி செய்ய தொடங்கினர். அவர் டாஸ் போட வரும்போது கூட ரசிகர்கள் அவரை கூச்சல் போட்டு அவமானப்படுத்தினர். ஆனால் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதும் அனைத்தும் தலைகீழாக மாறியது.

இதையடுத்து அடுத்த சீசனில் ரோஹித் ஷர்மா ஏலத்துக்கு சென்று வேறு அணிக்குத் தாவவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி கடுமையான பின்னடைவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் குழு மாற்றப்பட்டுள்ளது. மார்க் பவுச்சருக்கு பதில் மஹேலா ஜெயவர்த்தனே மீண்டும் அந்த அணிக்குத் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே 2017 முதல் 2022 வரை அந்த அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றினார். அதே போல பவுலிங் பயிற்சியாளராக பராஸ் மாம்ப்ரே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மலிங்கா கடந்த சில ஆண்டுகளாக மும்பை அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்