'' எம்,எஸ். தோனி குளோபல் மைதானத்தை'' திறந்துவைத்த' தல'தோனி !

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (17:56 IST)
எம்,எஸ். தோனி குளோபல் மைதானத்தை முன்னாள் கேப்டன் தோனி இன்று தொடங்கி வைத்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி.இவர்  அனைத்துவித கோப்பைகளையும் இந்தியாவுக்குப் பெற்றுக் கொடுத்த கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இவர், தற்போது ஐபிஎல் தொடரில், சென்னை கிங்ஸ் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்று விளையாடி வருகிறார்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள எம்.எஸ். தோனி கிரிக்கெட் மைதானத்தை, அதன் உரிமையாளர் தோனி இன்று திறந்துவைத்தார்.

மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சிப் பிரிவான சூப்பர் கிஸ்  என்ற அகாடமியுடன் இணைந்து இப்பள்ளியில், அனைத்து மாணவர்களுக்கும் கிரிக்கெட் தொழில்முறை பயிற்சி அளிக்கபடவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

 Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்