விராட் கோலி சச்சினின் 100 சதங்கள் சாதனையைக் கடப்பாரா?... பாகிஸ்தான் வீரர் கருத்து!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (08:30 IST)
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கோலி தற்போது தன்னுடைய மோசமான ஃபார்மில் இருந்து தேறி வருகிறார்.

விராட் கோலி சர்வதேசக் கிரிக்கெட்டில் இதுவரை 70 சதங்களை அடித்துள்ளார். ஆனால் 71 ஆவது சதத்தை அடிக்க அவர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார். இந்நிலையில் தற்போது ஆசியக் கோப்பை தொடரில் அவர் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் அவர் சச்சினின் சாதனையான 100 சதங்களைக் கடப்பது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் பேசியுள்ளார். அதில் “விராட் கோலி பந்தை நன்றாக மிடில் செய்யவில்லை. இரண்டு இன்னிங்ஸும் மிகவும் மோசமாக இருந்தது. அவர் ரன்கள் எடுத்தார், அவருக்கு எனது வாழ்த்துக்கள். கோஹ்லிக்கு எனது ஒரே ஆலோசனை டி20 உலகக் கோப்பை வரை காத்திருக்க வேண்டும். இந்த வடிவம் உங்களுக்குப் பொருந்தினால் அல்லது உங்களுக்குப் பொருந்தவில்லை என்றால். 30 சதங்கள் நீங்கள் இன்னும் அடிக்க வேண்டும். அதற்கு இந்த பார்மட் பொருந்தாது. இனி நீங்கள் அடிக்கப் போகும் ஒவ்வொரு சதமும் கடினமானதுதான். இப்போதுள்ள சூழ்நிலையில் அவர் சச்சினின் 100 சத சாதனையைக் கடப்பது கடினம்தான் என்றாலும் அதை நான் விரும்புகிறேன்” என்று அக்தர் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்