இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் நிதானமாக விளையாடிய கோலி 95 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தன்னுடைய 49 ஆவது ஒருநாள் போட்டி அரைசதத்தை இழந்தாலும் கோலி நேற்று மற்றொரு சாதனையை தகர்த்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இலங்கையின் சனத் ஜெயசூர்யாவை முந்தியுள்ளார். 13437 ரன்களோடு நான்காம் இடத்தில் இருக்கும் கோலிக்கு முன்பாக சச்சின், குமார சங்ககரா மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் மட்டும உள்ளனர்.