ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர்!

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (08:43 IST)
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை.

இங்கிலாந்து அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து வரும் வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட வில்லை. இதனால் அவர் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

இந்நிலையில் இப்போது காயம் குணமாகியுள்ள நிலையில் அவர் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு திரும்பியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விரைவில் நடக்க உள்ள ஒரு நாள் தொடரில் அவர் விளையாட உள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்