தோனி எங்களுக்குதான்..!? CSKவிடம் இருந்து பறிக்க திட்டமிடும் அணிகள்? - CSK போடும் பலே ப்ளான்!

Prasanth Karthick
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (15:39 IST)

ஐபிஎல் மெகா ஆக்‌ஷன் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள நிலையில் தோனியை தக்க வைக்க சிஎஸ்கே தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.

 

 

இந்தியாவில் பிரபலமான ஐபிஎல் போட்டிகளில் தற்போது 10 அணிகள் உள்ள நிலையில் அடுத்த சீசன் தொடங்குவதற்கு முன்னதாக ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து அணிகளும் தங்கள் அணியிலிருந்து தாங்கள் விரும்பும் 4 உள்நாட்டு வீரர்களை மட்டும் தக்கவைத்துக் கொண்டு மற்ற வீரர்கள் அனைவரையும் ஏலத்தில் விட்டு எடுக்க வேண்டியதிருக்கும்.

 

இந்த மெகா ஏலத்தால் 10 அணிகளின் ஸ்டார் வீரர்களும் மாற்றப்படும் சூழல் உள்ளது. இதில் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை தக்க வைக்குமா அல்லது விடுவிக்குமா என்பதுதான். மற்ற சில அணிகளும் தோனி விடுவிக்கப்பட்டால் அவரை அணியில் எடுக்க தீவிரமாக காய்கள் நகர்த்தி வருவதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

 

ஆனால் அதேசமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தோனியை விடுவதாக இல்லை. சமீபத்தில் நடந்த ஐபிஎல் அணிகளுக்கு இடையேயான ஆலோசனை கருத்து பகிர்வு கூட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் சீசன் தொடங்கியது முதல் 2021ம் ஆண்டு வரை இருந்த பழைய விதிமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறதாம். இந்த பழைய விதி அமலுக்கு வந்தால் தோனியை சிஎஸ்கே தக்க வைக்க முடியும்.

 

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஐபிஎல்லில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் ஒரு வீரர் விளையாடினால் அவர் அன்கேப்டு வீரர் ஆக க்ருத்தில் கொள்ளப்படுவார் என ஐபிஎல் பழைய விதிமுறைகளில் உள்ளது. இதனை அமலுக்கு கொண்டு வந்தால் சிஎஸ்கே தோனியை தக்க வைக்க முடியும். ஆனால் இதற்கு ஷாருக்கானின் கொல்கத்தா அணி, காவ்யா மாறனின் சன்ரைசர்ஸ் அணி உள்ளிட்டவை எதிர்ப்புகள் தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ஐபிஎல் அடுத்த சீசனில் தோனி எந்த அணியில் இருப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.


 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்