ஐபிஎல் 2023: சிஎஸ்கே மேட்ச் டிக்கெட் எவ்வளவு தெரியுமா? – வெளியான தகவல்!

Webdunia
ஞாயிறு, 26 மார்ச் 2023 (09:55 IST)
நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் மார்ச் 31ம் தேதி தொடங்கும் நிலையில் டிக்கெட் விலை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய ப்ரீமியர் லீக் டி20 போட்டிகள் ஆண்டுதோறும் மிகவும் பிரபலமாக நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகளில் அரபு அமீரகத்தில் நடைபெற்றன. தற்போது இந்த ஆண்டிற்கான ஐபிஎல் இந்தியாவிலேயே நடைபெறுகிறது. இதில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த ஐபிஎல் போட்டி சிஎஸ்கே அணி கேப்டன் தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என கூறப்படுகிறது.

இதனால் தோனியின் ஆட்டத்தை காணவும், சிஎஸ்கேவின் ஆட்டத்தை காணவும் ரசிகர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். பலர் நேரடியாக மைதானங்களில் சென்று காண ஆயத்தமாகி வருகின்றனர். மார்ச் 31ம் தேதி குஜராத்தில் தொடங்கும் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதற்கான டிக்கெட் விற்பனை நாளை காலை 9.30 மணி அளவில் தொடங்கப்பட உள்ளது. கவுண்ட்டர்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும் கேலரி சி, டி, இ லோயர் பிரிவுகளுக்கான டிக்கெட் ரூ.1500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலமாக விற்கப்படும் கேலடி டி, இ அப்பர் டிக்கெட்டுகள் ரூ.3000 ஆகவும், கேலரி ஐ, ஜே, கே லோவர் பிரிவுகள் ரூ.2500, கேலரி ஐ, ஜே, கே அப்பர் ரூ.2000 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்