ஐபிஎல் சீசனின் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
இதுவரை 10 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 5 போட்டிகளில் வென்று 10 புள்ளிகளுடன் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 10 போட்டிகளில் 4ல் வென்று 8 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.
முன்னதாக இந்த இரு அணிகளுக்கும் இடையே நடந்த போட்டியில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற நிலையில் இன்றைய போட்டியில் அதற்கு சிஎஸ்கே பதிலடி தருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் தற்போது டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் டாஸ் வெல்லவே மாட்டார் என்னும் துரதிஷ்டம் இந்த லீக் போட்டியிலும் தொடர்கதையாகியுள்ளது.