அதிக இரட்டை சதம்… இந்திய வீரர்கள் படைத்த சாதனை!

Webdunia
சனி, 10 டிசம்பர் 2022 (18:39 IST)
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் இஷான் கிஷான் இரட்டை சதம் அடித்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அவர் 126 பந்துகளில் 200 ரன்கள் சேர்த்தார். இதுவரை அடிக்கப்பட்ட இரட்டை சதங்களிலெயே  இதுதான் அதிவேக சதம். அதுமட்டுமில்லாமல் இஷான் கிஷான் தன்னுடைய முதல் சர்வதேச சததத்தையே இரட்டை சதமாக மாற்றிய பெருமை இஷான் கிஷானையே சேரும். 23 வயதாகும் இஷான் கிஷான் குறைந்த வயதில் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேலும் இந்திய அணியில் இதுவரை சச்சின் ஒரு முறை, சேவாக் ஒருமுறை, ரோஹித் ஷர்மா 3 முறை மற்றும் இஷான் கிஷான் ஒரு முறை என மொத்தம் 6 முறை இரட்டை சதம் இந்தியா சார்பாக அடிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற அணிகளில் எல்லாம் இதுவரை ஒன்றுக்கு மேற்பட்ட வீரர்கள் இரட்டை சதம் அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்