கிரிக்கெட் பாட்டி சாருலதா மரணம்! – பிசிசிஐ அஞ்சலி!

Webdunia
வியாழன், 16 ஜனவரி 2020 (13:21 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் அதி தீவிர ரசிகையான 87 வயது சாருலதா பாட்டி உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார்.

லண்டனில் வசித்து வந்த சாருலதா படேல் இந்திய அணியின் தீவிர ரசிகை ஆவார். லண்டனில் வசித்து வந்த இவர் கடந்த உலக கோப்பை போட்டியின்போது ஆட்டத்தை பார்க்க மைதானத்திற்கு வந்திருந்தார். வீல் சேரில் அமர்ந்தபடி உடலுக்கு இயலாத நிலையிலும் ஊதுகுழலை ஊதியபடி இவர் ஆட்டத்தை பார்த்து ரசித்தது சமூக வலைதளங்களில் வைரலானது.

வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற்ற போது இந்திய கேப்டன் விராட் கோலி சாருலதா பாட்டியின் காலை தொட்டு வணங்கி ஆசீர்வாதம் பெற்றார். தற்போது உடல்நல குறைவால் சாருலதா பாட்டி மரணமைடந்துள்ள நிலையில் பிசிசிஐ அவருக்கு ட்விட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளது.

அதில் ”இந்திய அணியின் சிறந்த ரசிகையான சாருலதா படேல் ஜி என்றென்றும் நம் நினைவில் நிலைத்திருப்பார். விளையாட்டின் மீதான அவரது ஆர்வம் நம்மை ஊக்குவிக்கும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என பதிவிட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சிலரும் சாருலதா பாட்டிக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டு வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்