ஒலிம்பிக்கில் சீன விளையாட்டு உபகரணங்கள்; பயன்படுத்த மறுத்தது இந்தியா!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (12:29 IST)
டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் சீன விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்த இந்தியா மறுத்துள்ளது.

உலக புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டே நடைபெற இருந்த இந்த போட்டிகள் கொரோனா காரணமாக கால தாமதமாக இந்த ஆண்டில் நடைபெறுகிறது.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு விளையாட்டு சீருடை, ஷூ உள்ளிட்ட உபகரணங்களை வழங்கும் சீன நிறுவனமான லீ நிங் நிறுவனத்தின் ஸ்பான்சரை இந்தியா மறுத்துள்ளது.

லடாக் எல்லை மோதலுக்கு பிறகு சீன பொருட்கள், செயலிகள் பலவற்றையும் பயன்படுத்துவதை இந்தியா தொடர்ந்து தவிர்த்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஒலிம்பிக் போட்டிகளில் சீன நிறுவன தயாரிப்புகளுக்கு பதிலாக நிறுவன பெயர் அல்லாத உடுப்பு மற்றும் உபகரணங்களை பயன்படுத்த உள்ளதாக இந்திய ஒலிம்பிக் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்