அதன் பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி நிதானமாக ஆடினாலும் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த வண்ணம் இருந்தது. இதனால் தேவைப்படும் ரன்ரேட் மளமளவென அதிகமானது. அந்த அணியின் பின்வரிசை பேட்ஸ்மேன்களான ஹாரி ப்ரூக் மற்றும் லியான் லிவிங்ஸ்டன் ஆகியோர் கடைசி நேர அதிரடியில் ஈடுபட்டு ரன்களை சேர்த்தனர். ஆனாலும் முக்கியமான கட்டத்தில் இருவருமே ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணியால் 20 ஓவர்களில் 156 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.