ஐபிஎல் சீசன் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் ஒரு அணியின் வெற்றிக் குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், கவுதம் கம்பீரை மறைமுகமாக சாடியுள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிப்பெற்று கோப்பையை வென்றது. ஆனால் மெகா ஏலத்தில் அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. இப்போது பஞ்சாப் அணியை சிறப்பாக வழிநடத்தி ப்ளே ஆப்க்கு கொண்டு வந்துள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர்.
இதுகுறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ”கடந்த சீசனில் கொல்கத்தா அணி கோப்பை வென்றபோது கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு போதிய பாராட்டு கிடைக்கவில்லை. அனைத்து புகழும் வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டது. அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றுவது கேப்டன் தானே தவிர ஆடுகளத்திற்கு வெளியே இருப்பவர் அல்ல. நடப்பு சீசனில் பஞ்சாப் அணியை ப்ளே ஆப்க்கு அழைத்து சென்றதற்கு ஷ்ரேயாஸ்க்கு பாராட்டு கிடைக்கிறது. ரிக்கி பாண்டிங்தான் காரணம் என யாரும் சொல்லவில்லை” எனக் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K