டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

vinoth

திங்கள், 19 மே 2025 (08:26 IST)
இந்திய அணியில் தற்போது மிகச்சிறப்பாக ஆடிவரும் பேட்ஸ்மேன்களில் ஒருவர் கே எல் ராகுல். தொடக்க ஆட்டக்காரர், மிடில் ஆர்டர் என எந்த இடத்திலும் இறங்கி ஆடக் கூடிய இவர் கூடுதலாக விக்கெட் கீப்பிங்கும் செய்யக் கூடியவர்.

இந்திய அணியில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மிடில் ஆர்டரில் விளையாடி வரும் இவர் டி 20 போட்டிகளில் மட்டும் தனக்காக இடத்துக்காக போராடி வருகிறார். தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

நேற்று குஜராத் அணிக்கு எதிராக சதமடித்த ராகுல் டி 20 போட்டிகளில் 8000 ரன்களைக் கடந்தார். அதிவேகமாக 8000 ரன்களைக் கடந்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார் ராகுல்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்