இந்த நூற்றாண்டின் சிறந்த படம் ரஜினியின் ‘காலா’.. இங்கிலாந்து பத்திரிகை தேர்வு..!

Mahendran

புதன், 19 ஜூன் 2024 (17:07 IST)
இந்த நூற்றாண்டின் சிறந்த 25 படங்களை இங்கிலாந்து சேர்ந்த பத்திரிகை ஒன்று தேர்வு செய்துள்ள நிலையில் அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் இடம்பெற்று இருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் சுமாரான வெற்றியை பெற்ற நிலையில் இந்த படம் இந்த நூற்றாண்டின் சிறந்த 25 படங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
 
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சைட் அண்ட் சவுண்ட் என்ற மாத இதழ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஓல்டு பாய், ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ், இன்லேண்ட் எம்பயர், பார்பரா, ப்ரைட்ஸ் மெய்ட்ஸ் ஆகிய படங்களுடன் காலா படத்தையும் சேர்த்துள்ளது 
 
மும்பை தாராவில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளை அலசும் இந்த படம் இந்த நூற்றாண்டின் சிறந்த படம் என்பது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்