எமர்ஜிங் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு இலங்கையில் ஜூலை 13 முதல் 23 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் கலந்துகொள்ளும் இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்த தொடருக்கு இந்திய ஏ அணியை பிசிசிஐ அனுப்பவில்லை. இந்நிலையில் இந்த முறை இந்திய அணி செல்ல உள்ள நிலையில் 2022 ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற யாஷ் துல் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.