துருவ் ஜுரேலை அதுக்குள்ள தோனியோட ஒப்பிடுவதா? கவாஸ்கர் மேல் கங்குலி காட்டம்!

vinoth
சனி, 2 மார்ச் 2024 (13:59 IST)
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியில். சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்திய அணிக்கு ரிஷப் பண்ட் இல்லாத நேரத்தில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பராக அவர் கிடைத்துள்ளார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அவரின் இந்த இன்னிங்ஸ் குறித்து ஒரு உரையாடலின் போது பேசிய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் “துருவ்வின் இந்த நிதானமான இன்னிங்ஸை பார்க்கும்போது அவரை அடுத்த எம் எஸ் தோனியாகவே நான் பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் கவாஸ்கரின் இந்த ஒப்பீட்டை இந்திய அணியின் மற்றொரு முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி விமர்சித்துள்ளார். இதுபற்றி பேசியுள்ள அவர் “ஜுரல் திறமையான வீரர்தான். ஆனால் அவரை அவர் போக்கில் விளையாட விடவேண்டும். தோனி, இப்போது அவர் இருக்கும் நிலைக்கு வர 15 வருடங்கள் ஆனது. அதற்குள் ஜுரெலை தோனியோடு ஒப்பிடாதீர்கள்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்