கேப்டன் பதவியை துறந்தது ஏன்? மெளனம் களைத்த மிஸ்டர் கூல்

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (17:29 IST)
இந்திஒய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதன் பின்னர் விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். 
 
கடந்த 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வுபெற்ற தோனி, அடுத்து 2017 ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின்  கேப்டன் பதவியிலிருந்து விலகினார்.
 
அணி நிர்வாகத்தின் அழுத்தம் காரணமாகவே தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகினார் என பல குற்றச்சாட்டுகள் எழுந்த போதும், இதற்கு பதிலளிக்காமல் இருந்தார் தோனி.
 
இந்நிலையில், சமீபத்தில் இதற்கான பதில் அளித்துள்ளார். அவர் கூறியது பின்வருமாறு, 2019 உலகக் கோப்பையை எதிர்கொள்ள புதிய கேப்டனுக்குபோதிய கால அவகாசம் வேண்டும் என்று நினைத்தேன். 
 
புதிய கேப்டனுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் சக்திவாய்ந்த அணியை உருவாக்குவது சாத்தியமற்றது. நான் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதற்கு சரியான நேரம் இது என்றும் நினைத்தே பதவியில் இருந்து விலகினேன் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்