அபிஷேக் போரல், ஸ்டப்ஸ் அதிரடி ஆட்டத்தால் வலுவான இலக்கை நிர்ணயித்த டெல்லி கேப்பிடல்ஸ்!

vinoth

செவ்வாய், 14 மே 2024 (21:22 IST)
இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதும் போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணிக் கேப்டன் கே எல் ராகுல் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

அதன்படி களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் போரல் அரைசதம் அடித்து அவுட் ஆனார். அதன் பின்னர் வந்த ரிஷப் பண்ட் மற்றும் ஷேய் ஹோப் ஆகியோரும் சிறப்பாக விளையாடி முறையே 33 மற்றும் 38 ரன்கள் சேர்த்தனர்.

அதன்பின்னர் ஆடவந்த டிரிஸ்ட்டியன் ஸ்டப்ஸ் கடைசி நேர அதிரடியில் இறங்கி மளமளவென ரன்களைக் குவித்தார். இதனால் அந்த அணி எளிதாக 200 ரன்களைக் கடந்தது. அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 25 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்தார். டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழந்து 208 ரன்கள் சேர்த்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்