“2 கிரிக்கெட் காதலர்களின் காரசார உரையாடல் அது” – கோயங்கா சர்ச்சை குறித்து லக்னோ அணி பிரபலம் கருத்து!

vinoth

செவ்வாய், 14 மே 2024 (07:23 IST)
சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் படுதோல்வி அடைந்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. இந்நிலையில் இந்த போட்டி முடிந்ததும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிமையாளர் கோயங்கா ராகுலிடம் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்த காட்சி வெளியாகி இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அந்த வீடியோவில் கோயங்கா ராகுலையும் அணி வீரர்களையும் கோபமாகத் திட்டி பேசுவது போல அவரது உடல்மொழி இருந்தது. அவரிடம் பதிலுக்கு எதுவும் பேசாமல் கே எல் ராகுல் அவர் சொல்வதை பணிவோடு கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து கே எல் ராகுல் நீக்கப்பட உள்ளதாக சொல்லப்பட்டது. மேலும் அடுத்த ஆண்டு மெகா ஆக்‌ஷனில் அவர் லக்னோ அணியால் தக்கவைக்கப்பட மாட்டார் என பரபரப்பான தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் லக்னோ அணியின் இணைப் பயிற்சியாளரான தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த லான்ஸ் க்ளூஸ்னர் இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ளார். அதில் “இரு கிரிக்கெட் காதலர்களுக்கு இடையில் நடந்த ஒரு காரசாரமான விவாதம் அது. அதனால் இதை பெரிதுபடுத்த தேவையில்லை. நாங்கள் எதிர்வரும் போட்டிகளில்தான் ஆர்வமாக உள்ளோம்.” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்