சி எஸ் கே அணிக்கு தொடர்ந்து இரண்டாவது தோல்வி… பேட்டிங் & பவுலிங்கில் கலக்கிய ஐதராபாத்!

vinoth

சனி, 6 ஏப்ரல் 2024 (07:55 IST)
சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினாலும் கடைசி கட்டத்தில் ரன்கள் குவிக்க முடியாமல் தினறியது.

இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 165 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சிவம் துபே அதிகபட்சமாக 45 ரன்கள் சேர்த்தார். இந்த எளிய இலக்கோடு களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கியது. அந்த அணியின் அபிஷேக் ஷர்மா 12 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார்.

இதை அப்படியே பிடித்துக்கொண்ட பேட்ஸ்மேன்கள் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தனர். இதனால்19 ஆவது ஓவரில் எஸ் ஆர் ஹெச் அணி இலக்கை எட்டியது. இந்த தோல்வி சி எஸ் கே அணிக்கு தொடர் இரண்டாவது தோல்வியாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்