நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 199 ரன்களை குவித்த நிலையில் சேஸிங்கில் இறங்கிய பஞ்சாப் அணி 200 என்ற வெற்றி இலக்கை 19.5வது ஓவரில் அடைந்து சாதனை வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகளில் 2ல் வெற்றி, 2ல் தோல்வி என குஜராத், பஞ்சாப் அணிகள் சம அளவில் 4 புள்ளிகளில் நீடிக்கின்றன.
இந்த போட்டியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய சாதனையையும் படைத்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் 200+ டார்கெட்டை சேஸ் செய்வது என்பது கடினமான காரியம். ஆனால் பஞ்சாப் நேற்றைய போட்டியுடன் சேர்த்து மொத்தம் 6 முறை 200+ ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்துள்ளது. இதனால் 5 முறை 200+ ரன்களை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 3 முறை 200 ரன் சேஸிங்கை செய்துள்ளன.