18 வயது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டி எஸ் பியாக நியமனம்!

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (15:14 IST)
சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக அறிமுகம் ஆன நசீம் ஷா மிகச்சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

இந்நிலையில் அவரை பலுசிஸ்தான் மாகாணத்தின் கௌரவ டி எஸ் பியாக நியமித்துள்ளனர். இது சம்மந்தமாக பலுசிஸ்தான் போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், பலுசிஸ்தான் போலீசார், நசீம் ஷாவை காவல்துறையின் "கௌரவ டிஎஸ்பி"யாக நியமித்தனர்.

அந்த கூட்டத்தில் உரையாற்றிய ஷா, தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்ததோடு, “சிறுவயதில் நான் காவல்துறையினரைப் பார்த்து பயந்தேன். என் பெற்றோர் போலீசை சொல்லி பயமுறுத்துவார்கள். இருப்பினும், நான் வளர்ந்தேன். எங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க அவர்கள் செய்யும் தியாகங்களை நான் உணர்ந்து கொண்டேன்.’ எனப் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்