உலக டெஸ்ட் வரலாற்றில் சாதனைப் படைத்த கேப்டவுன் டெஸ்ட்!

vinoth
வெள்ளி, 5 ஜனவரி 2024 (07:17 IST)
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வென்றது. இந்த போட்டி இரண்டாவது நாளிலேயே முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன் தினம் கேப்டவுனில் தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி வெறும் 55 ரன்களுக்கு அவுட் ஆகிவிட்டது.  அதன் பின்னர் ஆடிய இந்திய அணி 13 ரன்கள் சேர்த்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 176 ரன்கள் மட்டுமே தென்னாபிரிக்க அணி எடுத்தது. அதன் பின்னர் இலக்கை துரத்திய இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது.

இந்த போட்டி உலக டெஸ்ட் வரலாற்றிலேயே மிகக் குறைந்த பந்துகளில் முடிந்த டெஸ்ட் என்ற சாதனயைப் படைத்துள்ளது. இந்த போட்டியில் மொத்தமே 642 பந்துகள்தான் வீசப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் 1932 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த போட்டி 656 பந்துகள் வீசப்பட்ட நிலையில் முடிந்தது முதலிடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்