ஒருநாள் போட்டிகளின் எதிர்காலம் பற்றிய கேள்விக்கு பிசிசிஐ செயலாளர் பதில்
செவ்வாய், 27 ஜூன் 2023 (16:11 IST)
சமீப காலமாக டி20, ஐபிஎல் தொடர் போன்றவற்றால் ஒருநாள் போட்டிகளின் எதிர்காலம் என்னாகும் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இதற்கு பிசிசிஐ செயலாளர் பதில் அளித்துள்ளார்.
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியானது.
இந்த அட்டவணையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் மொத்தம் ஐந்து போட்டிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள நிலையில், இத்தொடருக்கான போட்டிகள் காலை 10:30 மணிக்கும் பகலிரவு போட்டிகள் மதியம் 2 மணிக்கும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதல் அரையிறுதி மும்பையில் மைதானத்திலும் இரண்டாவது அரையிறுதி கொல்கத்தா மைதானத்திலும் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்திலும் நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி மற்றும் இறுதி போட்டி ஆகிய இரண்டுமே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சமீப காலமாக டி20, ஐபிஎல் தொடர் போன்றவற்றால் ஒரு நாள் போட்டிகளின் எதிர்காலம் என்னாகும் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த விவாதங்களுக்கு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முற்றுப்புள்ளி வைக்கும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.