அமெரிக்காவுக்கு எதிராக 408 ரன்கள் குவித்த ஜிம்பாவே அணி

திங்கள், 26 ஜூன் 2023 (20:33 IST)
உலகக் கோப்பை தகுதி சுற்றுப் போட்டியில்  அமெரிக்காவுக்கு எதிராக ஜிம்பாவே அணி 408 ரன்கள் குவித்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருமான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது ஜிம்பாவேயில் நடைபெற்று வருகிறது.

10அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் இருந்து 6 அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குத் முன்னேறியுள்ளன.

குரூப் பி பிரிவில் ஜிம்பாவே, வெஸ்ட் இண்டீஸ்,  நெதர்லாந்து அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் அணிகளும் முன்னேற்றியுள்ளன.

இன்று நடைபெற்ற ஒரு லீக் போட்டியில், ஜிம்பாவே – அமெரிக்கா அணிகள் விளையாடின. இதில், டாஸ் வென்ற அமெரிக்கா , முதலில் பவுலிங் தேர்வு செய்தது. வில்லியம்சன் சதம் அடித்த பின்னர் 174 ரன்களில் அவுட்டானார்.  எனவே 50 ஓவர்களில் ஜிம்பாவே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 408 ரன்கள் எடுத்து, அமெரிக்காவுக்கு 409 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்