இந்திய தொடருக்காக வங்க தேச கிரிக்கெட் அணி 23 பேர் கொண்ட உத்தேச அணியை அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் இந்திய அணி வங்க தேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இதில் 1 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளும் அடங்கும். இத்தொடருக்கான இந்திய அணி வரும் நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் தற்போது இத்தொடருக்கான வங்கதேச உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.