இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட்டின் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா ஆகியோர் திருமணம் செய்துக் கொண்டு இன்றுடன் ஓராண்டு ஆகிறது. இதனை அவர்களது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இவர்கள் இத்தாலியில் மீடியா வெளிச்சம் இன்றி திருமணம் செய்துக்கொண்டனர். இவர்கள் திருணம நிகழ்ச்சியில் முக்கிய பிரபலங்கள் மட்டுமே கலந்துக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தை கலக்கின.
இந்நிலையில் அவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் மனைவிக்கு கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதாவது , தனது மனைவி அனுஷ்காவை, "அன்புத் தோழி, காதலி" என குறிப்பிட்டு விராட் கோலி பதிவிட்டுள்ளார். "நேற்று தான் நடந்தது போல இருக்கிறது. ஓராண்டு ஆகிவிட்டது என்பதை நம்ப முடியவில்லை. நாட்கள் பறந்துவிட்டன. எனது தோழியும் காதலியுமான அனுஷ்காவுக்ககு திருமண நாள் வாழ்த்துக்கள்" என ட்வீட் செய்திருந்தார்.
It's heaven, when you don't sense time passing by ... It's heaven, when you marry a good 'man' ...