2018 மே மாதத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி - பட்ஜெட்டில் அறிவிப்பு

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2017 (14:00 IST)
2017-ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதனையடுத்து இன்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 


 

 
முதல் முறையாக ரயில்வே பட்ஜெட்டுடன் இணைந்து இன்று தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது வரலாற்று முக்கியவத்தும் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 
இந்நிலையில், இன்றைய பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களை அறிவித்த அருண் ஜெட்லி 2018ம் ஆண்டு மே மாதத்திற்குள், இந்தியாவிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்து தரப்படும் என அறிவித்தார்.
 
அதேபோல், கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.1,87,223 கோடி ஒதுக்கீடு, கிராமப்புறங்களில் நாள்தோறும் 133 கி.மீ சாலை அமைப்பு, ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ரூ.48,000 கோடி ஒதுக்கீடு, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பெண்களின் பங்கு 55 சதவீதமாக அதிகரிப்பு, கிராமப்புறங்களில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்களை அவர் அறிவித்தார்.
அடுத்த கட்டுரையில்