சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் அவசர ஆலோசனை !

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (17:52 IST)
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

எனவே, சாதாரண மக்கள் மமுதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முதல் புதிய ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், இன்று டாஸ்மாக் கடைகளுக்கு புதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொரோனா முதல் அலையின்போது, தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மூடப்பட்டன. இதில் நஷ்டம் ஏற்பட்ட 100க்கும் மேற்பட்ட  திரையரங்குகள் நிரந்தரமாக மூடப்பட்டன.

சமீபத்தில் ரிலீஸாக மாஸ்டர், சுல்தான், கர்ணன் படங்கள் நல்ல வசூல் குவித்தாலும் தற்போது 5-% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்று முதல் இரவு பத்து மணி முதல் அதிகாலை 4 மணிவரை கட்டாயம் ஊரடங்கு அரசு அறிவித்துள்ளதால், இரவு காட்சி ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதனால் எம்.ஜி.ஆர் மகன் படம் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. எனவே தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அரசரக் கூட்டம் நாளை கூடுகிறது. இதில் அரசிடம் திரையரங்களுக்கு நிவாரண உதவி கோரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்