சல்மான் கானுடன் இந்தியில் நடிக்கும் ராம் சரண் தேஜா?

Webdunia
சனி, 31 அக்டோபர் 2015 (15:21 IST)
தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா விரைவில் இந்திப் படம் ஒன்றில் நடிக்கிறார். இதில் சல்மான் கானும், ராம் சரணும் ஹீரோவாக நடிப்பார்கள் என கூறப்படுகிறது.


 
 
ராம் சரண் ஏற்கனவே ஒரு இந்திப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். ஸன்ஜீர் என்ற அந்தப் படம் சரியாகப் போகவில்லை. தனி ஹீரோவாக நடித்து இந்தியில் இடம்பிடிப்பது அவ்வளவு சாத்தியமில்லை என்பதை அந்தப் படம் உணர வைத்தது.
 
ஸன்ஜீர் கற்றுத் தந்த பாடம் காரணமாக அடுத்த இந்திப் படத்தில் இன்னொரு ஹீரோவுடன் டபுள் ஹீரோ சப்ஜெக்டில் நடிக்கிறார். அந்த இன்னொரு ஹீரோ சல்மான் கானாக இருக்கலாம் என்கிறது மும்பையிலிருந்து வரும் செய்தி.
 
ராம் சரண் தற்போது சுரேந்திர ரெட்டி இயக்கத்தில் தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.