சின்ன வயசுல திருடும் பழக்கம் கொண்ட ஜான்வி கபூர்... எதை தெரியுமா..?

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (12:14 IST)
தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முடி சூடா நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த இவரது புகழ் இந்தி சினிமாவிலும் மேலோங்கி பறந்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார்.   இவரது மரணம் இந்திய சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியதோடு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் ஜாதி கபூர்  ஹிந்தியில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.   பாலிவுட் சினிமாக்களில்  தலைப்பு செய்தியாக பேசப்படுமளவிற்கு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை வெளிப்படுத்தி  கவர்ச்சி உடைகள் அணிந்து நடுரோட்டில் நடந்து வரும் வீடியோ வெளியாகி வைரலாகும்.

இந்நிலையில் ஜான்வி கபூரின் நெருங்கிய தோழியும், சந்தோஷியின் மகளுமான தனிஷா, ஜான்வியை குறித்து பேட்டி ஒன்றில் பேசியபோது " ஜான்வி சிறுவயதில் தனக்கு உபயோகமே இல்லாத பொருட்களை திருடிக்கொண்டு வருவாராம். இதுகுறித்து ஜான்வி கபூர் கூறுகையில் , எந்த ஒரு ஹோட்டலுக்கு சென்றாலும். அங்கிருக்கும் மீன் மற்றும் கற்களை திருடிக்கொண்டு வந்து அதை தன் வீட்டு மீன் தொட்டிக்குள் போட்டு வைத்துக்கொள்வேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்