என் நிர்வாண புகைப்படங்களால் இவர்களுக்கு என்ன பிரச்சனை என பாலிவுட் நடிகை ஈஷா குப்தா தைரியமாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஈஷா குப்தா தனது நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அந்த புகைப்படம் வைரலாகி தீயாக பரவியது. அதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் அவரை திட்டித் தீர்த்தனர்.
இதையடுத்து அந்த புகைப்படத்தை நீக்கியவர் மீண்டும் வேறொரு அரை நிர்வாண புகைப்படத்தை பதிவிட்டார். மீண்டும் நெட்டிசன்கள் அவரை திட்ட, மீண்டும் அவர் மற்றொரு புகைப்படத்தை பதிவிட்டார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் மாடலாக இருந்தபோது நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளேன். அப்பொழுது யாரும் என்னை எதுவும் கேட்டதில்லை. என் புகைப்படங்களால் இவர்களுக்கு என்ன பிரச்சனை. நம் நாட்டில் எப்பொழுதும் பெண்களை தான் குறை கூறுகிறார்கள் என்றார்.