OTT-ல் பிக்பாஸ்... அப்போ டிவி-ல் இல்லையா?

Webdunia
சனி, 10 ஜூலை 2021 (11:24 IST)
மக்களிடத்தில் பரீட்சையமான நிகழ்ச்சியான பிக்பாஸ் முதல் 6 வாரங்களுக்கு voot ஆப்-பில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. 

 
முதன் முதலாக "பிக்பாஸ் OTT" என்ற தலைப்பில், வரும் ஆகஸ்ட் 2021 முதல் இது வெளியாக உள்ளது. ஆம், ஹிந்தி பிக் பாஸ் 15 வது சீசன் பற்றிய ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால் டிவியில் ஒளிபரப்பு தொடங்கும் முன்பே ஓடிடி தளத்தில் 6 வாரங்களுக்கு இந்த பிக்பாஸ் ஷோ ஒளிபரப்பாகும் என்பதுதான்.
 
இதனை Voot தளத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ஆறு வாரங்கள் ஒளிபரப்பாகி முடிந்த பின்னர் பிக் பாஸ் 15 தொடர்ந்து டிவியில் ஒளிபரப்பாகும். வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி பிக் பாஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பை தொடங்கும் என டிவி அறிவித்திருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்