கொரோனா டெஸ்ட் ரிசல்ட்: இயக்குனர் ராஜமௌலி எமோஷ்னல் பதிவு

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2020 (19:35 IST)
சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்குப் பரவியுள்ள கொரொனாவால் மக்களின் வாழ்வாதரமும் பல தொழில்துறையும் முடங்கியுள்ளன. தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் பிரபல நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் தங்கள் புகைப்படங்களைப் பதிவிட்டும் ரசிகர்களும் பேசி வருகின்றனர்.

இந்த கொரோனா நோய் தொற்று சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாரபட்சமின்றி தாக்கி வருகிறது. அந்த வகையில்  நடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், விஷால், எஸ்.பி பாலசுப்ரமணியம், பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி , நடிகர் கருணாஸ் உள்ளிட்ட பலர் கொரொனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் ராஜமௌலி தனது ட்விட்டரில் "தனிமைப்படுத்தப்பட்ட 2 வாரங்கள் முடிந்தது! அறிகுறிகள் இல்லை. எனக்கும், எனது குடும்பத்தினருக்கு சோதிக்கப்பட்டதில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. எனினும் 3 வாரங்களுக்கு பிறகு தான் ஆன்டிபாடிஸ் உருவாகி இருக்கிறதா என பார்த்துவிட்டு பிளாஸ்மா தானம் செய்யலாமா என பார்க்கலாம் என மருத்துவர் கூறி இருக்கிறார்" என்றும் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்