ஆபாசப் பட நடிகைக்கு டிரம்ப் பணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (11:32 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் தமக்கு இருந்த உறவை மறைப்பதற்காக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு இருந்த ஆபாசப் பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ்-க்கு வழக்கறிஞர் கட்டணச் செலவாக 44,100 டாலர் வழங்க வேண்டும் என்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

இதன் இந்திய மதிப்பு சுமார் 33 லட்சம் ரூபாய்.

2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடப்பதற்கு 11 நாட்களுக்கு முன்பு ஸ்ட்ரோமி டேனியல்ஸ் மற்றும் டிரம்ப் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்படி டிரம்ப் உடன் தாம் பாலுறவு கொண்டது குறித்து ஸ்ட்ரோமி டேனியல்ஸ் ஊடகங்களிடம் பேசக்கூடாது.

ஆனால், டிரம்ப் அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட பின்பு அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி டேனியல்ஸ் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான சட்டச் செலவுகளை ஸ்ட்ரோமி டேனியல்ஸ் வழங்க வேண்டும் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிரம்ப் உடனான ஒப்பந்தத்தின்படி ஸ்ட்ரோமி மற்றும் டிரம்ப் இடையே நிகழ்ந்த பாலுறவு குறித்து, இரு தரப்பும் வெளியே பேசக்கூடாது; ஆனால், சம்பந்தப்பட்ட இருதரப்பும் இதுகுறித்து வெளியே பேசிவிட்டனர் என்பதால் வழக்கறிஞர் கட்டணச் செலவை தங்கள் தரப்பு ஆபாசப் பட நடிகைக்கு வழங்க வேண்டியதில்லை என்று டிரம்ப் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஆனால், அதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை

மெலானியா டிரம்ப்புக்கு அவரது மகன் பேரான் 2006இல் பிறந்த சில நாட்களில் டிரம்ப்புடன் தமக்குப் பாலியல் உறவு இருப்பதாக 2011இல் ஒரு பேட்டியில் டேனியல்ஸ் கூறியிருந்தார்.

டிரம்ப்புடனான உறவு குறித்து பொது வெளியில் பேசுவதைத் தவிர்க்க தமக்கு பணம் வழங்கப்பட்டதாக அந்த நடிகை கூறியிருந்தார்.


அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் தாம் பாலுறவு கொண்டதை வெளியில் தெரிவிக்காமல் இருக்க மிரட்டப்பட்டதாகக் கூறிய ஆபாசப் பட நடிகை ஸ்ட்ராமி டேனியல்ஸ், டிரம்ப் மீது தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், டிரம்ப் தரப்பின் சட்டச் செலவுகளில் சுமார் 75 சதவிகிதமான 2,93,052.33 டாலரை வழங்க வேண்டும் என்று டிசம்பர் 2018 உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

முன்பின் தெரியாத ஒருவரால் ஒருவேளை தாம் மிரட்டப்பட்டிருக்கலாம் என்று டிரம்ப் தம்மைப் பகடி செய்ததாக ஸ்ராட்மி டேனியல்ஸ் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தனி விவகாரங்களுக்கு நீண்ட காலமாக வழக்கறிஞராக செயல்பட்ட மைக்கேல் டீ கோஹன், கடந்த 2016இல் இந்த ஆபாசப் பட நடிகை ஒருவருக்கு 1,30,000 டாலர் பணம் அளித்ததாக, பிப்ரவரி 2018இல் அமெரிக்க ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருந்தார்.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்