ஆள்மாறாட்டம் பண்ணிதான் ட்ரம்ப் பாஸ் ஆனார்! – ஒரே புக்குல ட்ரம்ப் மரியாதை க்ளோஸ்!

செவ்வாய், 28 ஜூலை 2020 (10:15 IST)
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கைகளால் அவரது சொந்த கட்சியினரே அவர்மீது கோபத்தில் உள்ள நிலையில் வெளியாகியுள்ள ஒரு புத்தகமானது ட்ரம்ப் குறித்த பல உண்மைகளை வெளி உலகிற்கு காட்டியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.

உலக நாடுகள் முழுவதிலும் பத்திரிக்கைகளால் எள்ளி நகையாடப்படும் அதிபராகவும், ஆனால் முடிவுகள் எடுப்பதில் ஆபத்தானவராகவும் அறியப்படுபவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். தற்போது சீனாவுடனான மோதல், கொரோனா பிரச்சினை, கறுப்பினத்தவர் போராட்டங்களில் ட்ரம்ப் பேசிய விதம் ஆகியவை அமெரிக்கா முழுவதும் அவர்மீதான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

அடுத்த ஆண்டில் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் ஜோ ஃபிடன் வெற்றி பெறுவார் என அமெரிக்க செனட் சபாநாயகர் முதற்கொண்டு ஆருடம் சொல்லி வருகின்றனர். இந்நிலையில் ட்ரம்ப் சிறுவயதிலிருந்து செய்த தகிடுதத்தங்கள் பற்றி மேரி ட்ரம்ப் எழுதியுள்ள புத்தகம் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.

அதிபர் ட்ரம்ப்பின் அண்ணன் மகளான மேரி ட்ரம்ப் “டூ மச் அண்ட் நெவர் எனாஃப்” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். ட்ரம்ப்பின் வாழ்க்கை குறித்த இந்த புத்தகத்திற்கு உப தலைப்பாக ”என்னுடைய குடும்பம் எப்படி உலகத்தின் ஆபத்தான மனிதரை உருவாக்கியது?” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் கல்லூரியில் சேர ட்ரம்ப் வேறு ஒருவரை வைத்து நுழைவு தேர்வு எழுதி பாஸ் ஆனதாக தெரிவித்துள்ளார். மேலும் தொழிலதிபராக ட்ரம்ப் செய்த சில மோசடிகளையும் அந்த புத்தகத்தில் அவர் அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த புத்தகம் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்