பாகுபலி-2 திரைப்படம் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்..

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (17:28 IST)
இந்திய திரைப்பட வரலாற்றில் எந்தவொரு திரைப்படமும் இதுவரை ஏற்படுத்தாத எதிர்பார்ப்பை எஸ்.எஸ் ராஜமெளலியின் பாகுபலி 2 ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான 10 தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.


 

 
•பாகுபலி 1 மற்றும் 2 இரண்டு பாகங்களின் மொத்த பட்ஜெட் தொகை 450 கோடி ரூபாய். முதல் பாகம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகம் வெளியாகிறது.
 
•இந்தியா முழுக்க சுமார் 6,500 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் சுமார் 9,000 திரையரங்குகளிலும் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.
 
•பாகுபாலி 2 திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அந்த படம் சுமார் 500 கோடி ரூபாய் ஈட்டிவிட்டது.
 
•உலகளவில் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு பாகுபலி 2 வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
•இந்தி, தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஆங்கிலம், ஜெர்மன், ஜப்பானிய, ஃபிரெஞ்சு மற்றும் சைனீஸ் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகியுள்ளது.
 

•தெலுங்கு திரைப்படத்துறையில் 4K எச் டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் திரைப்படம் இதுவாகும்.

 
•உலகளவில் 650 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் தென்னிந்திய திரைப்படம் பாகுபலி 1.
 
•முதல் பாகம் வெளியான பிறகு பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற ஹேஷ்டேக்குகள், மீம்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் வைரலாக வலம் வந்தன.
 
•இந்தியாவில் பிரபல காமிக் புத்தகமான அமர சித்ர கதைகள் மீதான ஈர்ப்பு பாகுபலி என்ற திரைப்படத்தை எடுக்க இயக்குநர் எஸ் எஸ் ராஜமெளலிக்கு முக்கிய காரணமாக இருந்தது.
 
•பாகுபலியின் இரண்டாம் பாகத்திற்காக தெலுங்கு நடிகர் பிரபாஸ் தன்னுடைய எடையை 120 கிலோவில் இருந்து 150 கிலோவாக கூட்டினார்.
அடுத்த கட்டுரையில்