கைவிரித்த தென்கொரியா; சிக்கிக்கொண்ட அமெரிக்கா

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (16:54 IST)
எங்கள் நாட்டில் அமெரிக்கா அமைக்கும் ஏவுகணை தடுப்பு கவனுக்கு அவர்கள் கேட்கும் 100 கோடி டாலர் எங்களால் தர முடியாது என திட்டவட்டமாக தென்கொரியா அரசு தெரிவித்துள்ளது.


 

 
தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து வடகொரியா மீது போர் தொடுக்க தயாராகி வருவதாக வடகொரியா அதிபர் குற்றம்சாட்டினார். மேலும் அமெரிக்காவை எளிதில் அழித்துவிடுவோம் என்றும் சவால் விட்டார்.
 
இதனால் அமெரிக்கா தனது போர்கப்பல்களை தென்கொரியா கடற்பகுதியில் நிறுத்தியுள்ளது. மூன்றாம் உலக ஏற்படும் என்று உலக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தென்கொரியா நாடு, ஏவுகணை தடுப்பு கவனுக்கு  அமெரிக்கா கேட்டும் 100 கோடி டாலர் கொடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
 
ஏவுகணை எதிர்ப்பு கவனுக்கான விலை மற்றும் நிலை நிறுத்த செய்யும் பணிக்கான செலவினங்கள் அனைத்தையும் அமெரிக்கா ஏற்று கொள்ளும் என முன்னாள் அதிபர் ஒபாமா அறிவித்து இருந்தார். ஆனால் ட்ரம்ப் தலைமையிலான அரசு இதற்கான மொத்த செலவு தொகையையும் தென்கொரியா அரசு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து தென்கொரியா அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாதவது:-
 
எங்கள் நாட்டில் அமெரிக்கா அமைக்கும் ஏவுகணை தடுப்பு கவனுக்கு டொனால்ட் டிரம்ப் கேட்பதுபோல் 100 கோடி டாலர் பணத்தை நாங்கள் தர முடியாது. ஒப்பந்தத்தின்படி, ஏவுகணை தடுப்பு கவன் அமைப்பதற்கான இடத்தையும் தேவையான வசதிகளையும் மட்டும் எங்களால் செய்து தர முடியும். அதை நிர்வகிப்பது, பராமரிப்பது போன்றவை அமெரிக்க அரசின் பொறுப்பாகும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்