பிரிட்டிஷ் வைஸ்ராய் கொடுத்த சரவிளக்கு உடைந்தது

Webdunia
சனி, 22 ஆகஸ்ட் 2015 (19:09 IST)
உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவின் சரித்திர முக்கியத்துவம் மிக்க தாஜ்மஹாலின் வாசலில் உள்ள 60 கிலோ எடையுடைய சரவிளக்கு ஒன்று இந்த வார முற்பகுதியில் ஏன் நிலத்தில் விழுந்து உடைந்தது என்பது குறித்து இந்திய அதிகாரிகள் விசாரிக்கிறார்கள்.


 
 
இரண்டு மீட்டர்கள் உயரமான அந்த விளக்கை ஒரு பணியாளர் துப்பரவு செய்துகொண்டிருந்தபோது, அது விழுந்ததாகவும், அங்கிருந்த சுற்றுலா பயணிகள் பயத்தினால் வாசலை நோக்கி ஓடியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள்.
 
பணியாளர்களின் அஜாக்கிரதையே அது உடைந்ததற்கு காரணம் என்று சுற்றுலா வழிகாட்டிகள் கூறும் அதேவேளை, அது மிகவும் பழசாகிவிட்ட காரணத்தினாலேயே உடைந்திருக்கக்கூடும் என்று சம்பவம் குறித்து விசாரித்துக்கொண்டிருக்கும் அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கூறுகிறார்கள்.
 
இந்தியாவின் முன்னாள் பிரிட்டிஷ் வைஸ்ராயான கர்சண் பிரபுவால், அந்த சரவிளக்கு அன்பளிப்பாக வழக்கப்பட்டிருந்தது.