யுக்ரேன் எல்லையில் ரஷ்ய துருப்புகள்: இரண்டாம் உலக போருக்குப் பிறகான மிகப்பெரிய ராணுவ அணி திரட்டல் - அமெரிக்கா

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (00:08 IST)
யுக்ரேன் எல்லையில் ரஷ்ய படை வீரர்களின் பரவல் “இரண்டாம் உலக போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நிகழ்ந்த மிகப்பெரிய ராணுவ அணி திரட்டல்”, என, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்புக்கான அமெரிக்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
 
“வெளிப்படைத்தன்மை மற்றும் ஆபத்தைக் குறைப்பதில் ஈடுபடாமல், மாறாக பொய்யான தகவல்களை ரஷ்யா வழங்கி வருகிறது”, என மைக்கேல் கார்பென்டர் தெரிவித்துள்ளார். மேலும், யுக்ரேன் எல்லையில் 1,69,000-1,90,000 துருப்புகளை ரஷ்யா நிறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
 
“யுக்ரேன், நேட்டோ, அமெரிக்கா ஆகியவற்றை போரை தொடங்குபவர்கள் போன்று ரஷ்யா சித்தரிக்கிறது. அதிகளவிலான படைகளுடன், தன் அண்டை நாட்டின் மீது படையெடுப்பதற்கு ரஷ்யா அச்சுறுத்துகிறது” என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்