யுக்ரேன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம்

சனி, 12 பிப்ரவரி 2022 (10:42 IST)
யுக்ரேன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.


48 மணி நேரத்துக்குள் யுக்ரேனில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

வேறு சில நாடுகளும் தங்கள் நாட்டவர்கள் யுக்ரேனில் இருந்து வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளன.

யுக்ரேன் உடனான எல்லையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுக்க திட்டமிட்டுள்ளதாக மேற்குலக நாடுகள் கூறுகின்றன. ஆனால் அதை ரஷ்யா மறுக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்