கடலைச் சென்றடைந்த லா பால்மா எரிமலைக் குழம்பால் புதிய அச்சம்

Webdunia
ஸ்பெயின் நாட்டின் ஆளுகையின் கீழ் உள்ள லா பால்மா தீவில் நடந்த எரிமலை வெடிப்பின் போது வெளியிடப்பட்ட எரிமலை குழம்புகள் அட்லாண்டிக் பெருங்கடலை சென்றடைந்துள்ளன.

இதன் காரணமாக நச்சு வாயுக்கள் வெளியேற்றப்படலாம் என்றும் வெடிப்புச் சம்பவங்கள் நிகழக்கூடும் என்றும் அச்சங்கள் எழுந்துள்ளன.
 
ப்லாயா நூவே எனும் இடத்தில் செந்நிறத்தில் உள்ள எரிமலை குழம்பு கடலில் கலக்கும் இடத்தில் வெள்ளை நிற ஆவி மேகம் போன்று வெளியிடப்பட்டு வருகிறது.
 
இதன்காரணமாக தூண்டப்படும் ரசாயன நிகழ்வுகள் மனிதர்களின் தோல் மற்றும் கண்களுக்கு எரிச்சல் உண்டாக்குவதுடன் சுவாசக் கோளாறுகளையும் உண்டாக்கலாம்.
 
கேனரி தீவுகளில் செப்டம்பர் 19ஆம் தேதி எரிமலை வெடிப்பு நிகழ்ந்த பிறகு நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.
 
சுமார் 6 ஆயிரம் மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
 
எரிமலை குழம்பு கடலில் கலப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்று அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்