வெவ்வேறு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட ஜெர்மன் தலைவர்

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (10:28 IST)
ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஏங்கெலா மெர்கல் இருவேறு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டிருக்கிறார்.
 

முதலாவதாக ஆஸ்ட்ராசெனீகாவின் தடுப்பூசி போட்டுக்கொண்ட அவர், இரண்டாவதாக மாடனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
 
66 வயதான ஏங்கெலா மெர்கல் சில நாள்களுக்கு முன்பு மாடனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதாக அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்தில் மெர்கலுக்கு ஆஸ்ட்ராசெனீகாவின் தடுப்பூசி போடப்பட்டது.
 
ஒருவர் வெவ்வேறு தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வது நல்லது என்று நிபுணர்கள் கூறினாலும், அதை இதுவரை யாரும் உறுதிப்படுத்தவில்லை.
 
கடந்த 16 ஆண்டுகளாக ஜெர்மனியின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மெர்கல் இந்த ஆண்டு பதவி விலக இருக்கிறார்.
 
ஆஸ்ட்ராசெனீகாவின் தடுப்பூசியால் ரத்த உறைவு ஏற்படுவதாகக் கூறி கடந்த மார்ச் மாதம் அந்தத் தடுப்பூசிக்கு ஜெர்மனி உள்ளிட்ட சில ஐரோப்பிய ஒன்றிய  நாடுகள் தடை விதித்தன.
 
ஒரு நபருக்கு இருவேறு தடுப்பூசிகளைப் போடுவது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், இருவேறு தடுப்பூசி  போட்டுக்கொண்டவருக்கு லேசானது முதல் மிதமானது வரையிலான பக்கவிளைவுகள் வரும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்