ப.சிதம்பரத்திற்கு மேலும் ஒரு நாள் காவல் நீட்டிப்பு - சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

Webdunia
திங்கள், 2 செப்டம்பர் 2019 (20:31 IST)
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்திற்கு மேலும் ஒரு நாள் காவலை நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். பின்னர் 22ஆம தேதி சிபிஐ காவலில் எடுக்கப்பட்டார்.
 
இவரது காவலை ஏற்கனவே இருமுறை சிபிஐ நீதிமன்றம் நீட்டித்தது. இந்நிலையில் டெல்லியில் உள்ள ரோஸ் நீதிமன்றத்தில் சிதம்பரம் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது காவலை ஒருநாள் நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
 
மேலும், ப.சிதம்பரம் இடைக்கால ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நாளை நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்