பறக்கும் விமானத்தில் இருந்து தோட்டத்தில் விழுந்த பயணி!

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (12:04 IST)
விமானத்தில் ஒளிந்திருந்து பயணம் செய்தவராக சந்தேகப்படும் ஒருவரின் சடலம் லண்டனிலுள்ள கிளஃபாம் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 
கென்ய பயணியர் விமானம் ஒன்று ஹீத்துரு விமான நிலையத்தில் இறங்குவதற்கு சக்கரங்களை கீழே இறக்கியபோது, இந்த நபர் கீழே விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
 
நைரோபியிலிருந்து வந்த கென்ய பயணியர் விமானத்தில் இருந்து விழுந்தவர் என்று நம்பப்படும் இந்த நபரின் சடலம், பிரிட்டன் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.40 மணிக்கு கண்டெடுக்கப்பட்டது.
கிளஃபாம் தோட்டத்தில் சூரிய ஒளியில் படுத்திருந்த (சன் பாத்) உள்ளூர்வாசி ஒருவர் படுத்திருந்த இடத்துக்கு ஒரு மீட்டருக்கு அப்பால் இந்த நபர் விழுந்ததாக அருகே இருந்த ஒருவர் தெரிவித்தார்.
 
சத்தம் கேட்டு மாடியில் இருந்து கீழே பார்த்தபோது, அங்கு கிடந்த இந்த சடலத்தை கண்டதாகவும், தோட்டத்தில் சுவரில் ரத்த கறை இருந்ததை பார்த்த்தாகவும் பெயர் வெளியிட விரும்பாத இந்த நபர் கூறியுள்ளார்.
 
இதனை கண்டு, அருகில் சூரிய ஒளியில் படுத்திருந்தவரும், அதிர்ச்சியடைந்ததாக அவர் தெரிவித்தார். பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ள மெட் காவல்துறை, இந்த நபரின் இறப்பு சந்தேகத்திற்குரியதாக தோன்றவில்லை என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்