பயணிகள் மீது அலட்சியம் : இரண்டு சர்க்கரங்களுடன் இயங்கும் அரசுப் பேருந்து !

திங்கள், 1 ஜூலை 2019 (17:40 IST)
இன்றுதான் சென்னையில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான ஸ்டிரைக் நடந்து, பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது.  தங்கள் நலனில் அக்கரை காட்டும் ஓட்டுநர்கள் - நடத்துனர்கள் மக்களுகு பெருமளவு உதவுகின்றனர். அதே சமயம் அவர்களின் உதவி இல்லாமல் நம்மால் தினமும் இயங்க முடியாது என்பது ஊர்ஜிதமான உண்மை.
இந்நிலையில் பொள்ளாச்சி - திருப்பூர் சாலையில் பேருந்தின் பின் பகுதியில் நான்கு டயர்களுடன் ( 2+2 நான்கு டயர்கள் ) இயங்குவதற்குப் பதிலாக இரண்டு டயர்களுடன் இயங்குவது தற்போது பரவலாகிவருகிறது.
 
கோவை கோட்டத்தில் மட்டும் 1075 அரசுப்பேருந்துகள் இயங்குகின்றன.இந்தப் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் உள்ளதுதான் மக்களை முகம் சுளிக்க வைக்கின்றன. இந்நிலையில் கோவை கோட்டத்திலிருந்து இயங்கும் TN  38 N 1419  என்ற பேருந்து முன் பக்கத்தில் இரு சக்கரம், பின் பக்கத்தில் இரு சக்கரம் என இரண்டு சக்கரங்களுடன் செல்லும் காட்சிகள் ஒரு தனியார் இணையதள பக்கத்தில் வெளியாகியுள்ளன.
 
பொதுமக்களாகிய பயணிகள்  மீது அரசு கொண்டுள்ள அலட்சிய போக்கையே இது எடுத்துக்காட்டுவதாகவும் நெட்டிஷன்கள் தம் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்